Sunday 6 October 2013

புதுமைசெய்






புதுமைசெய்
----------------------
செய்
ஏதாவது செய்
ரத்தம் சிந்திய
மண்ணையெடுத்து.,

அநீதிக்கெதிராய்
ஏதாவது செய்ய
உறுதி எடுத்துக்கொண்ட
வாலிபனின் வரலாற்றை

சொல்லிக் கொடுக்காமல்
மவுனமாய் இருந்து கொண்டன
கல்விச்சாலைகள்

பொது என்ற பேரமைப்பு
உலகில் மனிதவாழ்வின்
அதிசயத்தை நிகழ்த்திய போது
அடிமைச் சங்கிலியால்
பூட்டப்பட்டுக்கிடந்தோம்.

தண்ணீர்
மூழ்கடித்து விட்டதென
மீன்களெப்போதும்
சலித்துக் கொள்வதில்லை
மூழ்கடித்த இருப்பில்தான்
அதன் மூச்சுக்காற்றுண்டு

மனிதா
நெருக்கடிக்கு பயந்து
வாழ்க்கையை விட்டு ஓடாதே
செய்
ஏதாவது செய்
விடியல் நிச்சயம்
மாவோவின் வார்த்தைகள்
நம்பிக்கைகளை விதைத்தது.

உழைப்பும்-வளர்ச்சியும்
இருப்புக்கொண்டது
அண்டை தேசத்தில்

கருத்தால் கட்டுண்டோம்
பொருளால் கஷ்டப்பட்டோம்
இருள் சூழ்ந்த வாழ்க்கை
நிரந்தரம் அல்ல நமக்கு

முன்னால் செல்லும்
நம் வாழ்க்கை
உரத்துச் சொல்லிக்
கொண்டேயிருக்கிறது

பொது என்ற பேரமைப்பே
உலகின் வெளிச்சம்
உன்மை உழைப்பிற்கு
அதுவே மருந்து

செய்
ஏதாவது செய்

முத்துக்குமார்-



3 comments:

  1. என் தாய் தெள்ளித்தின்ற மண்னும் அள்ளி விளையாடிய மண்ணுமாய் மண் பினைக்கும் அனைத்துமாய் காட்சிப்படும் பூமியிது. ரத்தச்சுவடுகள் இன்னும் காயாமல் இருக்கிற இதற்கு நாம் ஏதாவது செய்யத்தானே வேண்டும்.நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி தோழர் விமலன் அவர்களே,

    ReplyDelete