Friday 4 October 2013

உறுதி வேண்டும்,,,,,,,

ஒரு மாசமாவே என்னென்னு தெரியல ,மனசெல்லாம் வெறுமையாக ஒரே இறுக்கமாகவே இருக்கிறது.இன்றும் காலை எழுந்தவுடன் அப்படித் தான் இருந்தது.முன்பெல்லாம் காலை 5.30 மணிக்கெல்லாம் எழுந்து வாக்கிங்போன மனநிலை மாறிப் போனதின் காரணங்களை தேடிக் கொண்டேஇருக்கிறேன்.விடிகாலைசூரியன்செந்நிறவடிவமாக உயர் ந்து கொண்டுவருகிறது.தினமும் வைக்கும் இரையை தின்ன பறவை களும் வழக்கம்போல் வந்து கொண்டுதான் இருக்கிறது.இவையா வும்ஒரு போதும்தன்நிலைகளிலிருந்து மாறுவதாக இல்லை. இன்று  வீசும் காற்று என்னைஇப்படியெல்லாம் யோசிக்க தூண்டுகிறது.

"வாடித் துன்பமிகவுழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போல-நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

மகாகவி பாடலை காணம் இசைக்கிறது கரிசல் குயில்.உலகின் அதி சய தக்க மாற்றங்கள் அணைத்தும் மனித சக்தியால் உறுவானதே. வல்லமை படைத்த மனிதன் நாம்.
ஏமாற்றங்கள் வரலாம்,துன்பங்கள் ஏற்படலாம்,துரோகங்கள் தொட ரலாம்,அதை எல்லாம் எதிர் கொள்ள மனதில் உறுதி வேண்டும்.


 

4 comments:

  1. நிகழ்வதுதானே எல்லோருக்குமாய்.இருந்தாலும் தலர்வு கொள்ளா மனது ஓடிகொண்டே இருக்கிறது,ஓடிக்கொண்டிருகையில் தென்படுகிறவைகள் நம்மை செதுக்கி நிமிரவைப்ப்பவையாக/வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுத.

    ReplyDelete
  2. ஏமாற்றங்கள் வரலாம்,துன்பங்கள் ஏற்படலாம்,துரோகங்கள் தொட ரலாம்,அதை எல்லாம் எதிர் கொள்ள மனதில் உறுதி வேண்டும்.//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    கருத்தும் சொல்லிச் சென்றவிதமும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரமணி சார்,கருத்து வழங்கிய தங்களுக்கு நன்றி.,தொடர்பில் இருப்போம்

      Delete
  3. 'வாக்கிங்' ஒட்டவே இல்லை, பதிலாக நடை பயிற்சி அல்லது நடை உபயோகித்திருக்கலாம்

    ReplyDelete