Thursday 3 October 2013

வலி,,,,,,

      

எனது  நன்பன் முனியசாமி சூலக்கரை தொழிற்பேட்டையில் இன்ஜி னியரிங் ஒர்க்ஸ் நடத்தி வந்தான்.கூடஅவனது தம்பி பாலுவும்மற்று ம் சுமார் 5 பேருடன் வேலை நடந்து கொண்டிருந்தது.நான் சென்ற போது மணி 2.30.
ராகவன் பசியில் மிக கலைத்து போய் இருந்தான்.எனது நண்பனின் கையிலிருந்த கிரைண்டிங் மெசினிலிருந்து தீப்பொறீ பறந்து கொண் டிருந்தது.
அன்று தான் அவனது அம்மாவை பார்த்தேன்.வயசு ஐம்பதுக்கு மேல் இருக்கும்.கண்களீல் ஒளி இருந்தது.கபடம் இல்லாத பேச்சு அவளது முகத்திற்கு அழகு சேர்த்தது.கையில் பெரிய தூக்குவாளியுடன் வேர் வைசிந்த வந்த அவளை பார்துக் கொண்டிருந்ததை இன்னும் மறக்க முடியவில்லை.எல்லாரும்சாப்பிடஎங்களுக்குஉணவைபரிமாறிக் கொண்டுமகன்களுக்கு  பறிமாறுவதில்  கூடுதல் அக்கறை எடுத்து கொண்டாள்.
முந்தானையில் இருந்து ரெண்டு கடலை மிட்டாய் எடுத்து மகன்க ளுக்கு கொடுத்து திங்க சொல்லி பார்த்து கொண்டிருந்தாள்.
சின்னவன் தனது மோட்டடார் சைக்கிளில் செல்வதை பார்த்து எல் லை யில்லா சந்தோசம் கொன்டாள்.
திடீர் என்று ஒரு நாள் முனியசாமியிடம் இருந்து போன் வந்தது. அவனது  பேச்சில் ஒரு பதட்டம்.தம்பி திடீரென மயக்கம் போட்டு விட்டான் பக்கத்துமருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கிறேன் நீங்களும் வாருங்கள்என்று சொன்னான்.நான் போய் சேர்ந்த பிறகு தான் அவர்கள் வந்தார்கள்.
டாக்டர் பரிசொதனை செய்துவிட்டு அவன் மரணம் அடைந்த செய்தியைசொன்னபோது எங்களை ஒரு இருள் சூள்ந்து அருகில் இருக்கும் நண்பர்கள்கூட அடையாளம் தெரியாத,ஊமைகளாக, பலமிலந்தவர்களாக மாறி போனோம்.அவனது அம்மாவின் அலறல் இன்னும் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
வருடங்கள் பல உருண்டோடி விட்டது,நானும்முனியும் இன்றும் சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம்,அவனது தம்பிவைத்திருந்த மோட்டார் சைக்கிளை நான் ஓட்டிக் கொண்டு இருப்பதைஅவனது அம்மாவின் பார்வையில் படும் போது எல்லாம் பாலுவின் நினைவு
வந்துபோவதைஅவளது கண்களில் நான் பார்க்கிறேன்.அந்த பார்வை யில்ஒரு கோபம் தெரிகிறது.கர்ப்பத்தில்  சுமந்த அவளின் வலி தெரி கிறது.

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. கரப்பம் சுமந்த வலிமட்டும் இல்லை.இது மன்ம் சுமந்த வலி.வலிகள் இங்கு ஒரு சாராருக்கு மட்டுமே நிரந்தரமாகிப்போன சமூகத்தில் இது போன்ற நிகழ்வுகள் வெகு சாதாரமாய் நம்மை கடந்து போவதாய் அன்றாடங்களில்.நன்றாக இருக்கிறது சொல்லிச்சென்ற விதம்.சொல்கிற சம்பங்கள் அழுத்தம் சுமட்ன்ஹு தெரிவதாய்.தோழர் விடாதீர்கள் இழுத்துப்பிடித்து வைத்து ஒரு சிறுகதையாய் சமைத்து விடுங்கள்.நன்றி வணக்கம்/

    ReplyDelete
  3. நன்றி தோழா,
    உங்களின் விமர்சனம் என்னை ஊக்கப்படுத்துகிறது.

    ReplyDelete
  4. உங்கள் ஹீரோ ஹோண்ட பைக் பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

    ReplyDelete