Friday 4 October 2013

விடியும்


வழக்கம்  போல் கூட்டநெரிசலோடு மதுரைபோத்தீஸ்ஜவுளிக் கடை.
ஒரு  குடும்பம்  பர்ச்சஸ்  முடித்து  முருகன்  இட்லி கடையில்  சாப்பி ட்டால்தான்  திருப்தி  என  சொல்லிக்கொன்டே  போகிறார்கள்.
ஜவுளி  கடையின் வெளியில் ஊதா கலர் யூனிபார்மில்  இளம் வயது  பெண்கையில்  சி.டி  நிறைந்த  பாக்கெட்டுகளுடன்  நின்று  என்னை  வழி மறித்துசார்  இது அமெரிக்காவில்  உள்ள  சுற்றுலா  தலங்களை  பற்றிய முழு விவரம்உள்ளது, 2000 ரூபாய்க்கு  விற்கவேண்டிய இந்த சி.டிவெறும் 700ரூபாய்க்குவிற்கிறோம்வாங்குங்கள்என்றாள்.அவளி ன் ஆங்கில பேச்சு பெரிய படிப்புபடித்துள்ளதை காண்பித்தது .விடாம ல்  தொந்தரவு செய்தாள்.அவளின் நிலைபற்றி  விசாரிக்க  மனம்  தூண்டியது.  படித்ததோ எம்.எஸ்.சி.     வேலைக்கு அலைந்து  சலித்து  போனாள் அவள்,  குடும்ப சூழல் மிக வறுமையில் வாடியநிலையில்  இன்னும்  வேலை தேடி நேரத்தை செலவழிப்பதை விட இது சரிஎன  பட்டதை சொன்னாள்.வாங்க வேண்டும் என நினத்தாளும் கை யில்
பணம் கம்மியாக உள்ளது.வேண்டாம் என சொன்ன பின் தான் தெரிந் ததுஅருகில் உட்கார்ந்து பூ விற்றுக் கொண்டிருக்கும் அந்த வயதான பெண்ணின்மகளென்று.20ரூபாய்  கொடுத்து வாங்கிக் கொண்டேன்.
கஷ்டங்கள் இருந்தாலும் நம்பிக்கையோடு வாழும் மனிதர்கள்.
இவர்களின்நம்பிக்கைகள்ஒருநாள்விடியும். 
 இரவு  முடிவை   நோக்கி சென்று கொண்டிருக்கிறது.,கிழக்கு சிவந்து விடிய காத்து கொண்டிருக்கிறது ;
  

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. விடியும் என்ற சொல்லே நம்பிக்கையின் நூற்புதானே?

    ReplyDelete
  3. சரியாகச் சொன்னீர்கள்
    நமபிக்கைதானே வெறுமையை விரட்டியடிக்கும்
    வாழ்வின் உயிர்மூச்சு
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete